வேலவா வடி வேலவா - சிவ
பாலகா எனைச் சேரவா
காலக் கருவறையில் கோலம் வரைந்துகொண்டு
காத்திருந்தேன் முருகா காத்திருந்தேன்
ஞாலம் பிறந்ததென்று நானும் பிறந்துவந்து
பார்த்திருந்தேன் உனை பார்த்திருந்தேன்
வேலவா வடி வேலவா - சிவ
பாலகா எனைச் சேரவா
வாழும் வகை இதென்று தேரும் அறிவிழந்து
சேர்த்திருந்தேன் சொந்தம் சேர்த்திருந்தேன்
நாளும் பொழுதும் இன்பம்தேடி அலைந்து தினம்
வேர்த்திருந்தேன் உடல் வேர்த்திருந்தேன்
வேலவா வடி வேலவா - சிவ
பாலகா எனைச் சேரவா
வாடும் எனது உடற்கூடும் கலைவதற்குள்
பாடுகின்றேன் உன்னை பாடுகின்றேன்
பாடும் எனது தமிழ் ஆடும் உனது மயில்
ஓடுதையா வினை ஓடுதையா
வேலவா வடி வேலவா - சிவ
பாலகா எனைச் சேரவா
வேலுண்டு வினை தீர்க்க
வேலுண்டு எனைக் காக்க
வேலுண்டு பயம் இல்லை
வேலுண்டு துயர் இல்லை
ஆடுகிறேன் மகிழ்ந் தாடுகிறேன்
வேலவா வடி வேலவா - சிவ
பாலகா எனைச் சேரவா
- இந்துமகேஷ்
No comments:
Post a Comment