Tuesday, November 13, 2012

ஓம் கணநாதா ஓம்






















ஓம் கணநாதா ஓம்
ஓம் கணநாதா ஓம்
ஓம் கணநாதா ஓம்

பிள்ளைத் தமிழில் உன்னைப் பாடும்
பேரருள் தந்தாய் கணநாதா!
பேசும் தமிழில் வாசம்செய் சிவ
பெருமான் மகனே கணநாதா!

கள்ளம் இல்லா உள்ளம் தனிலே
களிநடம் புரிவாய் கணநாதா!
எண்ணம் செயல்கள் யாவிலும் நின்று
எமக்கருள் தருவாய் கணநாதா!

ஓம் எனும் மந்திரம் உரைக்கும் பொருளே
ஓருமுக மானாய் கணநாதா!
உலகம் யாவும் உன்னருளாலே
உருளக்கண்டோம் கணநாதா!

நாமுனைப் பாடிப் பணியும் வாழ்வை
நமக்கருள் செய்தாய் கணநாதா!
நன்மைகள் வாழ தீமைகள் சாய
நற்றுணை யானாய் கணநாதா!

எம்முயிரோடு உடலும் பொருளும்
எல்லாம் உனதே கணநாதா!
எதுவந்தாலும் உன்னருள் என்றே
ஏற்றுப் பணிவோம் கணநாதா!

ஓம் கணநாதா ஓம்
ஓம் கணநாதா ஓம்
ஓம் கணநாதா ஓம்

அன்புருவானாய் கணநாதா!
ஆண்டருள் செய்வாய் கணநாதா
இன்பம் நீயே கணநாதா
ஈசன் மகனே கணநாதா
உள்ளம் வலுவுற கணநாதா
ஊக்கம தருவாய் கணநாதா
எங்கும் நிறைந்தாய் கணநாதா
ஏகதந்தனே கணநாதா
ஐங்கரநாதா கணநாதா
ஓருபெரும் இறைவா கணநாதா
ஓம் எனும் வடிவே கணநாதா

ஓம் கணநாதா ஓம்
ஓம் கணநாதா ஓம்
ஓம் கணநாதா ஓம்



-இந்துமகேஷ்

            (ஆடி-2011)

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.

என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா  முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...