முருகா! மால் மருகா!
வருவாய் துணைபுரிவாய்!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
காடலைந்து வள்ளிதன்னைக்
கரம்பிடித்த வேலவா!
நாடலைந்தும் உன்னில் நாங்கள்
கொண்டகாதல் காணவா!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
ஓமுரைத்த பொருள் வகுத்து
தந்தைமனம் ஈர்த்தவா!
நாம்அழைக்கும் நிலையறிந்து
நன்மைகளைச் சேர்க்கவா!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
நீபடைத்த மண்ணில் என்றும்
நிறைந்திருக்கும் வேலவா!
போர்முடித்து சுதந்திரத்தைப்
போற்றுகின்ற வாழ்வு தா!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
ஆறுபடை வீடமைத்து
அருள்புரியும் வேலவா
தேறுதலைத் தேடும் எங்கள்
தீவினைகள் போக்கவா!
வேலெடுத்து சூரர்படை
வேரறுத்த வேலவா!
நாடுகாக்கப் போர்தொடுத்த
நமது சுற்றம் காக்கவா!
(இந்துமகேஷ் - 1992 ஆடி)
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
கணநாதா கண்பாராய்! - இந்துமகேஷ் சீர்பொலியும் ஜெர்மனியின் வடதிசையில் தலம் கொண்டாய். திருவடியைச் சரண்புகுந்தோம் சிவபாலா காத்தருள்வாய். பார்ப...
-
கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கருணைமழை பொழிகின்ற அழகனுக்கு அரோகரா ஆடினேன் பாடினேன் ஆனந்தக் கூத் தாடினேன் தேடினேன் நாடினேன் திருவடியி...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment