Monday, October 17, 2011
எமையாளும் பரமேஸ்வரி
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!
ஊராள உலகாள உனையாள எனை ஆள
உறவாகி வந்தாளடி! ஒளியாகி நின்றாளடி!
ஒன்றாகிப் பலவாகி ஒவ்வொன்றும் தானாகி
நின்றாளும் ஜெகதீஸ்வரி! நிலையான ஜோதீஸ்வரி!
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!
மண்ணாகி விண்ணாகி வளியாகி ஒளியாகி
புனலான சிவனேஸ்வரி! பொறியாளும் ஞானேஸ்வரி!
எண்ணாகி எழுத்தாகி எழுத்துக்குள் பொருளாகி
எமையாளும் பரமேஸ்வரி! எழிலான பாலேஸ்வரி!
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!
தீராத வினையாவும் தீர்த்தெம்மைக் காக்கின்ற
தாயெங்கள் நாகேஸ்வரி! தருவாளே மனநிம்மதி!
திசைமாறிப் போனாலும் எமைவிட்டு நீங்காமல்
சேர்வாளே சர்வேஸ்வரி! சிவனாரின் லிங்கேஸ்வரி!
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி - இந்த
ஜெகம் ஆளும் புவனேஸ்வரி!
இந்துமகேஷ்
(01.03.2008)
Subscribe to:
Post Comments (Atom)
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன்.
என்னை இழந்து இழந்து உன்னை அறிந்தேன். -இந்துமகேஷ் முருகா முருகா முருகா! அருவே உருவே எனதாருயிரே உருகும் மனதுள் உறையும் திருவே முருகா முருகா ம...
-
கணநாதா கண்பாராய்! - இந்துமகேஷ் சீர்பொலியும் ஜெர்மனியின் வடதிசையில் தலம் கொண்டாய். திருவடியைச் சரண்புகுந்தோம் சிவபாலா காத்தருள்வாய். பார்ப...
-
கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கருணைமழை பொழிகின்ற அழகனுக்கு அரோகரா ஆடினேன் பாடினேன் ஆனந்தக் கூத் தாடினேன் தேடினேன் நாடினேன் திருவடியி...
-
துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திருக்கோயில் தனை நாடினேன் -இந்துமகேஷ் துதிபாடித் துதிபாடித் துணை தேடினேன் துதிக்கையான் திர...
No comments:
Post a Comment